மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் களவாடப்பட்டமை தொடர்பாகப் பொலிஸாருக்குப் பெருமளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அத்துடன், கடந்த 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் மட்டும் மேல் மாகாணத்தில் பத்து மோட்டார் சைக்கிள்களும் மூன்று முச்சக்கர வண்டிகளும் திருடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காகச் சிறப்புக் குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் அவர்கள் கூறியுள்ளார்.
Police report an increase in the theft of motorcycles and three-wheelers, especially in the Western Province, including the city of Colombo, with a high number of recent complaints regarding vehicles stolen from the streets. Specifically, 10 motorcycles and 3 three-wheelers were stolen in the Western Province on the 8th and 9th alone. Special investigation teams have been deployed to look into these incidents, according to Police Media Spokesperson and Assistant Superintendent of Police F.U. Woodler.



