11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையின் காரணமாக, 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
- கண்டி மாவட்டம்: உடுநுவர, உடுதும்பர
- கேகாலை மாவட்டம்: புலத்கொஸுபிட்டிய, யட்டியந்தோட்டை
- மாத்தளை மாவட்டம்: பல்லேபொல, அம்பகஸ்கோரலய
இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
- பதுளை: ஹல்தும்முல்ல, ஊவாபரணகம
- காலி: நெலுவ
- கம்பஹா: அத்தனகல்ல
- கண்டி: தெல்தொட்ட, தொலுவ
- கேகாலை: மாவனெல்லை, ருவன்வெல்ல, அரநாயக்க, ரம்புக்கனை
The National Building Research Organisation (NBRO) has extended the landslide warning for 11 districts due to the prevailing adverse weather conditions in the country. The warning includes several divisions under the first level of alert in the Kandy, Kegalle, and Matale districts, and the second level of alert in the Badulla, Galle, Gampaha, Kandy, and Kegalle districts.