கைக்குட்டைகளை விற்பனை செய்வதாகக் கூறி தங்க சங்கிலி மற்றும் பணப்பைகளைத் திருடிய ஐந்து பெண்கள் ஹட்டன் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகைக் காலத்தில் பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக ஹட்டன் நகரத்திற்கு வந்த ஏராளமான மக்களிடம் கைக்குட்டைகளை விற்பனை செய்வதாகக் கூறி, இந்த ஐந்து பெண்களும் கடந்த 19 ஆம் திகதி தங்கச் சங்கிலிகள் மற்றும் பணப்பைகளைத் திருடியபோது கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தங்கச் சங்கிலி கொள்ளை
குருநாகல், நாவலப்பிட்டி மற்றும் பவுவாகம பகுதிகளைச் சேர்ந்த இந்தப் பெண்கள், கைக்குட்டைகளை விற்பனை செய்வதாகக் கூறி, தீபாவளிக்குப் பொருட்கள் வாங்க வந்த ஒரு பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொள்ளையடித்துள்ளனர்.
பணப்பைகளைத் திருடியது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் ஹட்டன் பதில் நீதவானிடம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தங்கச் சங்கிலியைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் இந்த மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும், மற்றவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு, 21 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Five women were arrested by Hatton Police on the 19th for allegedly stealing gold chains and purses from people in Hatton town under the pretense of selling handkerchiefs during the Diwali festival period. The women, hailing from Kurunegala, Nawalapitiya, and Pauwagama, snatched a gold chain from one female shopper. The woman accused of the gold chain theft was remanded until the 21st, while the others arrested for stealing purses were released on bail and ordered to appear before the Hatton Magistrate’s Court on the 21st.