நுவரெலியாவில் டொப்பாஸ் வனப்பகுதியில் நேற்று (29) காலை ஒரு ஆண் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது:
கண்டெடுக்கப்பட்டவர் நுவரெலியாவின் சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதான ரோஷன் லக்மால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் இம்மாதம் 8 ஆம் திகதி முதல் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்ததாகவும், இதுகுறித்து அவரது குடும்பத்தினர் நுவரெலியா பொலிஸில் காணாமற்போனவர் தொடர்பான முறைப்பாடு ஒன்றை முன்வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை டொப்பாஸ் வனப்பகுதியில் விறகு வெட்டச் சென்ற தொழிலாளர்கள் குழுவொன்று வனப்பகுதியில் ஒரு சடலம் இருப்பதை கண்டறிந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.
பின்னர், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அவரது தந்தையால் அடையாளம் காணப்பட்டதாகவும், பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நுவரெலியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
The Nuwara Eliya Police reported that the body of a man was discovered in the Topass Forest area in Nuwara Eliya yesterday morning (the 29th). The deceased was identified as Roshan Lakmal (27), a resident of the Shanthipura area, Nuwara Eliya, who had been missing since the 8th of this month, for which a complaint was lodged by his family. The body was discovered by a group of laborers who had gone to the Topass forest to cut firewood and was subsequently identified by the deceased’s father. The police have sent the body to the Judicial Medical Officer at the Nuwara Eliya District General Hospital for a post-mortem examination, and further investigations are underway by the Nuwara Eliya Police.


