Tuesday, September 16, 2025

உல்லாசத்துக்கு அழைத்த இளைஞர்களைக் கொடூரமாக சித்ரவதை செய்த பெண்!

இந்தியாவில், இரண்டு இளைஞர்களை உல்லாசத்திற்கு அழைத்து, பணம் மற்றும் செல்போனைப் பறித்ததுடன், அவர்களின் மர்ம உறுப்பில் ‘ஸ்டேப்ளர் பின்’ அடித்துச் சித்திரவதை செய்த ஒரு தம்பதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம், சரல்குன்னு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயேஷ் (29). இவருடைய மனைவி ரஷ்மி (23). இவருக்கு, ஆலப்புழையைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், ரஷ்மி அந்த வாலிபரிடம், “நாம் ஒன்றாக இருக்கலாம்” என்று கூறித் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அதை நம்பிய அந்த வாலிபர், கடந்த 1ஆம் திகதி ரஷ்மியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டிற்குள் நுழைந்த அந்த இளைஞன் ரஷ்மியுடன் நெருங்கிச் சென்றபோது, அங்கு மறைந்திருந்த ரஷ்மியின் கணவர் ஜெயேஷ், அதை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.

சிறிதுநேரத்தில் அங்கு வந்த ஜெயேஷ், தனது மனைவியுடன் சேர்ந்து அந்த இளைஞனை மிரட்டி, அவனிடமிருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ. 6 ஆயிரத்தைப் பறித்தனர். அத்துடன், அந்த வாலிபரின் கைகளைக் கட்டித் தொங்கவிட்டு, அவரது மர்ம உறுப்பில் 26 ‘ஸ்டேப்ளர் பின்’களை அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர். மேலும், அவரது கை விரல் நகங்களையும் பிடுங்கியுள்ளனர். இதில் வலி தாங்கமுடியாமல் அந்த இளைஞன் அலறியுள்ளார்.

உடனே அவரது வாயைத் துணியால் கட்டி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குக் கொண்டுபோட்டுவிட்டுச் சென்றனர். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒருவர், இளைஞனின் முனகல் சத்தம் கேட்டு, அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஆரன்மூளா பொலிஸார், இளைஞன் சிகிச்சை பெறும் வைத்தியசாலைக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, ஜெயேஷ் மற்றும் அவரது மனைவி ரஷ்மியைக் கைதுசெய்தனர்.

பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பணத்திற்காக ரஷ்மி இளைஞர்களைக் குறிவைத்து முதலில் ஆசை வார்த்தை கூறி வலையில் வீழ்த்தியுள்ளார். பின்னர் வீட்டிற்கு அழைத்து, பணம் மற்றும் செல்போனைப் பறித்துள்ளார். இந்தச் செயல்களுக்கு ஜெயேஷ் உடந்தையாக இருந்துள்ளார். கடந்த 5ஆம் திகதி ஓணம் விழா அன்று, ரான்னியைச் சேர்ந்த, தன்னுடன் பணிபுரியும் மற்றொரு இளைஞனையும் ரஷ்மி வீட்டிற்கு அழைத்து, அவரிடமிருந்தும் பணத்தைப் பறித்து, சித்திரவதை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆரன்முளா பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.


 

In Kerala, India, a couple has been arrested for luring young men for sexual encounters and then torturing them for money and valuables. The suspects, Jayesh (29) and his wife Rashmi (23), would use social media to attract victims. After bringing a man to their home, they would threaten and rob him. In a particularly horrific incident, they allegedly tortured a man by binding him, pulling out his fingernails, and stapling his genitals before leaving him in an isolated area. Another similar case involving a different man was also revealed during the police investigation.

Hot this week

பிறந்து 15 நாளான பச்சிளம் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!

பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அதன் தாயே குளிர்சாதனப்...

உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய ‘Bone-02’ மருத்துவ பசை!

உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய 'எலும்புப் பிசின்'...

முகநூல் காதலனுக்காக 600 கி.மீ பயணித்த பெண்; இரும்புத் தடியால் அடித்துக் கொன்ற காதலன்!

இந்தியாவில் காதலனைச் சந்திப்பதற்காக 600 கிலோமீட்டர் பயணம் செய்த பெண் ஒருவர்...

உலக சாதனை!ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு லட்சம் பேர்…

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளதாக அந்த...

கனடாவில் வீட்டு விற்பனை அதிகரிப்பு!

கனடாவில் வீட்டு விற்பனையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் மாதத்தில்,...

Topics

உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய ‘Bone-02’ மருத்துவ பசை!

உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய 'எலும்புப் பிசின்'...

முகநூல் காதலனுக்காக 600 கி.மீ பயணித்த பெண்; இரும்புத் தடியால் அடித்துக் கொன்ற காதலன்!

இந்தியாவில் காதலனைச் சந்திப்பதற்காக 600 கிலோமீட்டர் பயணம் செய்த பெண் ஒருவர்...

உலக சாதனை!ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு லட்சம் பேர்…

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளதாக அந்த...

கனடாவில் வீட்டு விற்பனை அதிகரிப்பு!

கனடாவில் வீட்டு விற்பனையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் மாதத்தில்,...

படுக்கையில் உயிரிழந்த பெண்: பிரேதப் பரிசோதனையில் வெளியான உண்மை!

படுக்கையில் இறந்து கிடந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில், அவர்...

திவுலப்பிட்டிய பகுதியில், மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்த பெண் கைது

கம்பஹா - திவுலப்பிட்டியவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரெட்டுகளை விற்பனை...

நாட்டில் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img