Wednesday, October 22, 2025

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான புதிய நடைமுறை அறிமுகம்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்குத் தேவையான மருத்துவச் சான்றிதழ்களை இணையவழியில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால், அச்சிடப்பட்ட நகல் வடிவத்தில் மருத்துவச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துப் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப் பத்திரம் காலாவதியானதும், அதைப் புதுப்பிப்பதற்காக மக்கள் வேரஹெரவிலுள்ள அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது. இது பொதுமக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. கைரேகை பதிவு செய்ய வேண்டியிருப்பதால்தான் வேரஹெராவிற்குச் செல்வது கட்டாயமாக உள்ளதாகப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போதைய நடைமுறையை ஒரு மாதத்திற்குள் மாற்றி, சாரதி அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்க வேரஹெராவிற்குச் செல்லாமல் எளிதாகச் செய்யக்கூடிய ஒரு முறையை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும், அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்த புதிய முறை நடைமுறைக்கு வரும் என்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு மேலும் தெரிவித்துள்ளார்.

The Ministry of Transport has announced plans to issue online medical certificates for driving licenses to combat irregularities in the current system. This new initiative aims to streamline the license renewal process, which currently requires individuals to visit the office in Werahara, primarily for fingerprinting. According to Deputy Minister Janitha Ruwan Kodithuwakku, initial work has already begun, and the new system, which will eliminate the need to travel to Werahara for renewals, is expected to be implemented within one month.

Hot this week

திருமண மறுப்பு காரணமாக அண்ணியாரின் அதிர்ச்சி செயல்; குடும்பம் பரபரப்பு

தங்கையிடம் பழகி, பின்னர் கழற்றி விட்டு மற்றொரு பெண்ணுடன் பழக ஆர்வம்...

விபச்சார விடுதியில் சிக்கிய குடும்பப் பெண்கள் கைது

கேகாலை - வரக்காப்பொல நகரத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி...

நாட்டில் மரக்கறிகளின் விலை உச்சத்தை எட்டும் நிலையில் உள்ளது

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, எதிர்வரும் நாட்களில்...

வவுனியா மாநகர சபையின் செயல்பாடுகள் தடை; நீதிமன்றம் அதிரடி உத்தரவு வெளியிட்டது

வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும்...

பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த மாணவிக்கு ஏற்பட்ட விபத்து; பரிதாபமாக உயிரிழப்பு

நேற்று பெய்த கனமழை காரணமாக பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த...

Topics

யாழில் போதைப்பொருள் பழக்கத்தால் இளம் பெண் உயிரிழப்பு

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான...

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி...

மன்னார்–மதவாச்சி பிரதான சாலையில் சொகுசு பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img