சிரேஷ்ட பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டியை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சு உறுதி செய்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (17.12.2024) உரையாற்றும் போது, எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்தார். அவர், சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்பு வட்டி குறைப்பு தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை கூறினார்.