400 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டிய உலகின் முதல் நபராக எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவராக இருக்கும் எலான் மஸ்க், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார். சமீபத்தில் ஸ்பேஸ் எக்ஸின் பங்கு விற்பனையிலும், டெஸ்லா பங்குகளின் மதிப்பு உயர்வினாலும் அவரது சொத்து மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
அதோடு, ஸ்பேஸ் எக்ஸின் மொத்த மதிப்பீடு தற்போது சுமார் 350 பில்லியன் டாலராக இருந்தும், இதன் மூலம் உலகின் மிக அதிக மதிப்புள்ள தனியார் நிறுவனமாக அது அமைகிறது.
மேலும், எலான் மஸ்கின் சொத்து மதிப்பை அவரது செயற்கை நுண்ணறிவு நிறுவனம் எக்ஸ் ஏஐயும் அதிகரித்துள்ளது. உலக வரலாற்றில் யாரும் அடையாத அளவுக்கு சொத்து மதிப்பு உயர்ந்துள்ளார். கடந்த மாத இறுதியில் ரூ.29 லட்சம் கோடி மதிப்பிலிருந்த அவரது சொத்து தற்போது ரூ.33 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.