கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தாமரசேரி அரச மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார். அமீபா காய்ச்சலால் தனது மகள் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த தந்தை ஒருவரே இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
9 வயதுடைய அந்தக் குழந்தை அமீபா காய்ச்சலால் உயிரிழந்தார். தனது மகளுக்கு மருத்துவர்கள் உரிய முறையில் சிகிச்சையளிக்கவில்லை என அவரது தந்தை குற்றஞ்சாட்டினார். மகளின் இழப்பைத் தாங்க முடியாத நிலையில், அவர் மருத்துவரை சரமாரியாகத் தாக்கி, வாளாலும் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.
தற்போது, இந்தச் சம்பவத்தைச் செய்த சிறுவர் உயிரிழந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த மருத்துவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சந்தேகநபரான அந்தத் தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
A father in Kozhikode, Kerala, tragically attacked a doctor at the Thamarassery Government Hospital with a sword after his 9-year-old daughter died from amoebic fever. The father, who blamed the doctor for the death, has been arrested and placed under judicial custody. The injured doctor is currently receiving treatment.