ஜனநாயக ஆட்சியை முன்னெடுத்து, மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான புதிய இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கை பயணித்த அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு, USAID பிரதி உதவி நிர்வாகி அஞ்சலி கவுர், அமெரிக்க திறைசேயின் பிரதி உதவி செயலாளர் றொபர்ட் கப்ரோத் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் ஆகியோர் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகளின் குழு, சிவில் பிரதிநிதிகள் குழுவை சந்தித்த போது இந்த தகவல் வெளியிடப்பட்டது.
பயங்கரவாதத் தடுப்பு சட்டம், இணைய பாதுகாப்பு போன்ற சட்டங்களின் பொருட்டு சிவில் சமூகப் பிரதிநிதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த சூழலில், ஜனநாயக நிர்வாகத்தை நிலைநாட்டும் போது, மனித உரிமைகளை பாதுகாப்பதும், உரையாடலின் முக்கியத்துவம் உணர்த்துவதும் தொடர்பில் புதிய அரசாங்கத்தை ஊக்குவிப்பதாக அமெரிக்க பிரதிநிதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.