மாகாணத்துக்குள் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் செல்லுபடியான பயணச்சீட்டுகளைப் பெறுதல் அவசியம் என மேல் மாகாண போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேல் மாகாண எல்லைக்குள் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் கட்டாயம் செல்லுபடியாகும் பயணச்சீட்டுகளைப் (டிக்கெட்) பெற வேண்டும் என்று மேல் மாகாண போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த உத்தரவுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் பயணிகள் மற்றும் நடத்துநர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
இரண்டு மடங்கு அபராதம்
தற்போது, பயணிகளுக்கு பயணச்சீட்டை வழங்கத் தவறும் நடத்துநர்களுக்கு ரூ. 750 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில், நாளை (அக்டோபர் 01) முதல், பயணச்சீட்டு இல்லாத பயணிகளுக்கு ரூ. 100 அபராதம் மற்றும் அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை விட இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. எதிர்காலத்தில், இந்த அபராதத் தொகையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பயணிகள் முச்சக்கர வண்டிகளின் பதிவு மற்றும் உரிமம் தொடர்பான 2002 ஆம் ஆண்டு விதிமுறைகள் மீண்டும் ஆரம்பமாகும் என ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து முச்சக்கர வண்டிகளும் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்களை வைத்திருக்க வேண்டும் என்பதே இந்த விதிகளின் முக்கிய நோக்கம் எனவும் மேல் மாகாண போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
The Western Province Transport Authority (WPTA) has mandated that all passengers traveling on private buses within the province must obtain valid tickets and has announced new fines starting October 1st. Currently, bus conductors failing to issue tickets are fined Rs. 750, but from tomorrow, passengers without a ticket will face a fine of Rs. 100 plus double the fare. Additionally, the WPTA confirmed the reintroduction of the 2002 regulations for passenger three-wheeler registration and licensing, making it compulsory for all such vehicles to be registered and hold valid permits.