வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, இன்று பி.ப. 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
அத்துடன், மேல் மாகாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
⚠️ பொதுமக்களுக்கான எச்சரிக்கை
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
The Department of Meteorology forecasts a high probability of rain or thundershowers in most parts of the country after 1:00 PM today. Rain or thundershowers are also likely in the Western Province and the Galle and Matara districts during the morning hours. Additionally, misty conditions are expected in some areas of the Western, Sabaragamuwa, and Central provinces during the morning. The public is advised to take necessary precautions to minimize damage from temporary strong winds and lightning strikes during thundershowers.