கிழக்கு, மத்திய, ஊவா, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், பொலன்னறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலையில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளைகளில் சில இடங்களில் பனிமூட்டம் காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய மின்னல் தாக்கங்கள் மற்றும் தற்காலிக பலத்த காற்றினால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
The Department of Meteorology has forecast rain or thundershowers after 1:00 PM in the Eastern, Central, Uva, Southern, and Sabaragamuwa provinces, as well as in the Polonnaruwa, Mullaitivu, Kilinochchi, and Jaffna districts. Other parts of the country may also experience rain or thundershowers after 1:00 PM, while the Western and Southern provinces are likely to see rain in the morning, and mist is expected in the Sabaragamuwa, Central, and Uva provinces. The department has advised the public to take necessary precautions against lightning and temporary strong winds associated with the thundershowers.