நாட்டில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
உயர் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களில் சுமார் 24 சதவீதத்தினரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இலங்கைச் சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் தொடர்பான மனநல வைத்திய நிபுணர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
“கல்வியில் உள்ள கடுமையான அழுத்தம், வீட்டில் பெற்றோருடனான பிரச்சினைகள், சமூக ஊடகங்களின் பாவனை மற்றும் பிள்ளைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான அழுத்தம் ஆகியவைதான் இந்தக் மன அழுத்தத்திற்குக் காரணங்கள் என்பதையும் இந்த மனநலச் சோதனை கண்டறிந்துள்ளது,” என்று அவர் விளக்கினார்.
“இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 19 சதவீதத்தினர் மன அழுத்தத்தின் அறிகுறிகளுடன் வாழ்கின்றனர் என்பதையே இந்த ஆய்வு காட்டுகிறது,” என்றும் பேராசிரியர் சந்திரதாச மேலும் குறிப்பிட்டார்.
இன்றைய (அக்டோபர் 10) உலக மனநல தினத்தை முன்னிட்டு தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டபோது, பேராசிரியர் மியுரு சந்திரதாச மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.
A recent study in Sri Lanka, as shared by Professor Miyuru Chandradasa, President of the Sri Lanka Association of Child and Adolescent Mental Health Specialists, has revealed that 60% of schoolchildren are affected by mental stress, with 24% of students in higher grades experiencing the same. The mental health screening identified intense pressure from studies, issues with parents at home, social media usage, and physical strain on children as the main causes, further noting that 19% of Sri Lanka’s population shows symptoms of mental stress.