யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது மரணமடைந்த 26 வயதான இளம் தாய் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவைச் சேர்ந்த அந்த 26 வயதான இளம் தாய், நேற்றையதினம் (09) இரவு இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவரது உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தாயின் இறப்புக்கான சரியான காரணம் என்ன, அது நடந்த நேரம் எது போன்ற விவரங்களை வைத்தியசாலை நிர்வாகம் சரியாகத் தெரிவிக்காததால், அந்தத் தாய் சடலத்தை ஏற்க உறவினர்கள் மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
The relatives of a 26-year-old young mother from Neduntheevu who died during childbirth at the Jaffna Teaching Hospital yesterday (09) have raised suspicions regarding her death. They have refused to accept the body because the hospital reportedly failed to provide the correct reason and time of the death, and further investigations into the matter are underway.