மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் பிணவறையில், பெண்ணின் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, நீலேஷ் பில்லாலா (25) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் கக்னர் சமூக சுகாதார நிலையத்தின் பிரேதப் பரிசோதனை அறையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி நடந்துள்ளது.
சம்பவம் நடந்து பல மாதங்கள் கழித்து, அக்டோபர் மாதம் மருத்துவமனை ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளைச் சரிபார்த்து ஆய்வு செய்தபோதுதான் இந்த அருவருக்கத்தக்க செயல் வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த சிசிடிவி காட்சிகளில், குற்றம் சாட்டப்பட்ட பில்லாலா நள்ளிரவு நேரத்தில் பிரேதப் பரிசோதனை அறைக்குள் நுழைந்து, ஸ்ட்ரெச்சரில் இருந்த சடலத்தை வெளியே இழுத்து, கேமராவின் பார்வையில் படாத ஓரிடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்னர் சடலத்தை மீண்டும் ஸ்ட்ரெச்சருக்கு அருகில் வைத்துவிட்டு, அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.
இந்தச் சிசிடிவி காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவி நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து, வைத்தியர் ஆதியா தாவர் என்பவர் கடந்த 7 ஆம் திகதி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸார் வழக்குப் பதிவு செய்து நீலேஷ் பில்லாலாவை உடனடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
A man named Nilesh Billala (25) was arrested in Burhanpur district, Madhya Pradesh, for sexually assaulting a woman’s corpse inside the mortuary of a government hospital in April 2024. The incident came to light months later, in October, when hospital staff reviewed CCTV footage that showed the accused committing the crime. Following the spread of the footage on social media and a subsequent police complaint, Billala was arrested and is currently in judicial custody.