மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் ஒன்று, தனியார் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை (13) மோட்டார் சைக்கிளில் வந்த இந்த மர்மக் கும்பல், ஒரு வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி (ஆட்டோ) மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டுச் சென்றுள்ளது.
அதுமட்டுமின்றி, அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளை அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மல்லாகம் வீதியில், மாசியப்பிட்டி சந்திப் பகுதியில் வீதியின் நடுவே நிறுத்தி அதற்கும் தீ வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
An unidentified gang of four masked individuals set fire to private vehicles in the Sandilipay North area, which falls under the Manipay Police Division. The masked group, arriving on a motorcycle in the early hours of the morning, set fire to a parked three-wheeler and then took a motorcycle from the same location, drove it about a kilometer away, and set it alight in the middle of the road. A complaint has been lodged with the Manipay Police, and investigations are currently underway.