கேகாலை – வரக்காப்பொல நகரத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டதாக வரக்காப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வரக்காப்பொல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பில் அந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
42 மற்றும் 36 வயதுடைய பெண்கள்
கைது செய்யப்பட்டவர்கள் பிலியந்தலை மற்றும் ஹசலக்க ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 42 மற்றும் 36 வயதுடைய பெண்கள் ஆவர்.
சந்தேக நபர்கள் வரக்காப்பொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். மேலும், வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Two women were arrested by Warakapola Police during a raid on a brothel operating under the guise of a massage parlor in Warakapola town, Kegalle. The arrested women, aged 42 and 36 and residents of Piliyandala and Hasalaka, were produced before the Warakapola Magistrate’s Court, which ordered a medical examination for them and adjourned the case until December 3rd. Warakapola Police are conducting further investigations.