இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 9 வயது மாணவி பாடசாலையின் 4வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்:
குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாடசாலையின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பொலிஸார் விசாரணையில், ஆசிரியர்கள் தொடர்ந்து துன்புறுத்தியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்த தகவலைப் பாடசாலை நிர்வாகம் மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறித்த மாணவி பாடசாலையின் 4வது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
A 9-year-old female student studying at a prominent school in Jaipur, India, committed suicide by jumping from the 4th floor of the school building last Friday evening. The incident’s video has been released on social media, causing widespread shock. Police investigations reportedly suggest that the girl committed suicide due to continuous harassment by teachers. Furthermore, there are allegations that the school administration attempted to conceal information regarding the student’s suicide. Police are continuing to investigate the incident.


