Monday, December 23, 2024

இலங்கையில் மீண்டும் மின்சாரம் தடை!

இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மீண்டும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்க நேரிடக்கூடும் என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை, தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் கொள்வனவு செய்ததாகவும், மின்சார சபையின் உள்ளக செயல்பாடுகளில் மின்சார மாபியா இன்னும் செயல்பட்டுவருவதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், மின்சார சபையில் நிலவும் நெருக்கடி நிலைமையை எடுத்துக்கூறும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஜெனரேட்டர்கள் முழு கொள்ளளவுக்கு இயங்காத நிலையை காரணமாகக் கொண்டு, தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் கொள்வனவு செய்யும் செயற்பாடு மின்சார மாபியாவை மீண்டும் உயிர்ப்பித்துள்ளதாக அவர் கூறினார். இந்த மாபியாவே மின்சாரக் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நீர் மின்சாரம் மற்றும் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் இருந்தபோதும், தனியாரிடம் மின்சாரம் கொள்வனவு செய்வது மிகுந்த செலவாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். மின்சார சபை இவ்வாறு செயல்பட்டால், வருகிற வருடம் வறண்ட காலமான பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மின்சாரம் கொள்வனவு செய்யத் தேவையான நிதி மின்சார சபைக்கு கிடைக்காத நிலை உருவாகக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அந்நிலையில், நாடளவில் மீண்டும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் மின்சாரம் துண்டிக்க நேரிடக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

Hot this week

“சேர்” என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன்,...

கொழும்பில் பாலத்திற்கடியில் பச்சிளம் குழந்தை புறக்கணிப்பு: இரக்கமற்ற செயல்

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ், ஓரிரு நாட்களான குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில், தகவல்...

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான சில தனியார் பேருந்துகள் பயணிகளிடம் தொடர்ச்சியாக மோசடியில் ஈடுபடுவதாக...

முல்லைத்தீவு கடற்கரையில் வெடிபொருட்கள் மீட்பு சம்பவம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் புதைக்கப்பட்ட நிலையில் 4.7 கிலோ அளவிலான வெடிபொருட்கள்...

வவுனியாவில் தொடரும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனை

வவுனியா தெற்கு வலயத்தில் 23 கணித ஆசிரியர்களும் 2 விஞ்ஞான ஆசிரியர்களும்...

Topics

குற்றவியல் விசாரணை தொடர்பான அனுரகுமாரவிற்கு அனுப்பப்பட்ட விசேட கடிதத்தின் சுருக்கம்

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து...

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இந்திய சிறைபிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள்

அனலைதீவிலிருந்து கடற்றொழிலுக்கு சென்று, இயந்திர கோளாறினால் இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று கடற்றொழிலாளர்கள்...

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை வென்ற அமரன் மற்றும் மகாராஜா படங்கள்.. முழு விவரம்”

மிழ் சினிமாவில் இந்த வருடம் பல வெற்றிப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன....
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img