இந்த ஆண்டின் மிகச் சிறந்த விண்கல் மழைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜெமினிட்ஸ் விண்கல் மழையை மக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெமினிட்ஸ் எனப்படும் இந்த விண்கல் மழை இன்று (13) மற்றும் நாளை (14) இரவுகளில் காணக்கூடியதாக இருக்கும் என்று ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
உச்ச நிலையை அடையும் போது, ஒரு மணிநேரத்தில் நூற்றுக்கணக்கான எரிகற்கள் வானில் செறிவாகத் தோன்றும். பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும் போது, இந்த எரிகற்கள் எரிந்து நட்சத்திரத் துளிகள் போல தீச்சிதறலாகக் காட்சியளிக்கும்.
இரவு 9 மணிக்குப் பின்னர் வடகிழக்கு வானில் மணித்தியாலத்துக்கு சுமார் 120 விண்கற்களை காணமுடியும் என வானியல் விஞ்ஞானி இந்திக மெதகங்கொட தெரிவித்தார்.