தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே யூடியூப் வழிகாட்டுதலை நாடி வீட்டிலேயே பிரசவம் செய்ய முயன்றதில், குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரிய செங்கீரை பகுதியில் வசிக்கும் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி அபிராமி, குழந்தைபேறுக்காக மருத்துவமனைக்கு செல்லாமல், யூடியூப் காணொளியை பயன்படுத்தி வீட்டிலேயே பிரசவம் செய்ததாக தெரியவந்துள்ளது. இந்த முயற்சியின் போது குழந்தை உயிரிழந்ததுடன், அபிராமி உடல்நலக் குறைவு காரணமாக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
முதற்கட்ட விசாரணையில், முதல் கர்ப்பத்தின் போது குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து அலோபதி மருத்துவத்தின் மீது நம்பிக்கையின்றி, இரண்டாவது கர்ப்பத்தையும் சுகாதாரத்துறையினரிடமிருந்து மறைத்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.