பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, இலங்கையில் தனது உதவித் திட்டங்களை விரிவுபடுத்த முன்வந்துள்ளது.
நேற்று (13.12.2024) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அறக்கட்டளையின் பல்வேறு உதவித் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.
முதற்கட்டமாக, நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள், ஊட்டச்சத்து மேம்பாட்டு முயற்சிகள், பாடசாலை மாணவர்களுக்கான உணவுத்திட்டங்கள், விவசாய துறையின் நவீனமயமாக்கல், டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்கள், மற்றும் கால்நடை மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அறக்கட்டளை சம்மதித்துள்ளது.
இந்த கலந்துரையாடல் தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது, இதில் கேட்ஸ் அறக்கட்டளையின் அதிகாரிகளும் பங்கேற்றனர். இலங்கையின் புதிய அரசாங்கத்தின் முன்னுரிமைகளை புரிந்துகொண்டு, அதற்கான தேவைகளுக்கு முழு ஆதரவையும் வழங்க தயாராக உள்ளதாக அறக்கட்டளை உறுதியளித்துள்ளது.