தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், நிக்கோபார் தீவுகளின் அருகில் தாழமுக்க நிலை உருவாகியுள்ளதாக புவியியற் நிபுணர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். இதன் மைய அமுக்கம் 1004 மில்லிபார் அளவில் உள்ளதாகவும், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
இந்த தாழ்முக்கம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் 17ஆம் திகதி இலங்கையின் வடக்கு மற்றும் தமிழக கடற்பகுதிகளுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 18ஆம் திகதியன்று இந்த தாழ்வுநிலை தமிழ்நாட்டின் மகாபலிபுரம் பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் நிலைமை:
- 15-18ஆம் திகதிகள்: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- காற்றின் வேகம்: 17ஆம் திகதியில் இருந்து மணிக்கு 40 கி.மீ. வரை வீசும்.
- கடல்பகுதிகள்: 15ஆம் திகதியிலிருந்து கடலின் நிலை கொந்தளிப்பாக காணப்படும்; மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
- மழை மிகுந்த பகுதி: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்; குறிப்பாக தாழ்நிலப் பகுதிகளில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
மேலும், 20ஆம் திகதியன்று இந்தோனேசியாவின் பண்டா அச்சே பகுதியில் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதன் நிலைமையை உறுதிப்படுத்த இன்னும் சில நாட்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.