தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இலங்கையில் தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் மற்றும் பாதுகாக்கும் கூட்டாட்சி அரசியலமைப்புக்கு இந்தியாவின் ஆதரவை வலியுறுத்தி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விசேட கடிதம் அனுப்பியுள்ளது.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு அனுப்பப்பட்ட இக்கடிதத்தில், இலங்கையின் வரலாற்றில் இதன் முக்கியத்துவம் விவாதிக்கப்படுவதற்கு உரியது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்தில் மேலும், 75 ஆண்டுகால கொள்கைகள் மற்றும் தீர்க்கப்படாத இனப்பிரச்சினைகள் நாட்டை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடையச் செய்தன என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். ஜனநாயக மாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய கொள்கைகள் மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
13வது திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னரும், அதிகாரப் பகிர்வு பொருத்தமான முறையில் செயல்படாதது மற்றும் நாடு இன்னும் ஒற்றையாட்சிக் கட்டமைப்பில் முக்கடுபாடு அடைந்துள்ளதையொட்டி, தமிழர் சமூகத்தின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு தேவைப்படுவதைக் கோரியுள்ளனர்.