வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகாண்பின் படி, தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (16) குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளது. இதன் அமைப்பு மெதுவாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 2 நாட்களில் தமிழகத்தின் வடக்கே கடற்கரைப்பகுதிகளை நோக்கிச் செல்லும் வாய்ப்பு உள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், பிற பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை கனமழை பெய்யும் எனவும், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் காலை நேரங்களில் பனிமூட்டம் ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னலுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும் அபாயமும் காணப்படுவதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.