இந்தியாவின் புதுடில்லியில் நடத்தப்பட்ட சர்வதேச UCMAS போட்டியில், இலங்கையிலிருந்து பங்கேற்ற மாணவர்களில் அதிகளவிலான சாம்பியன் பட்டங்களை யாழ்ப்பாணம் கிளை மாணவர்கள் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில், இலங்கையின் பல பகுதிகளிலிருந்து 103 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 16 மாணவர்கள் சர்வதேச சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், யாழ்ப்பாண கிளையில் இருந்து 6 பேர் பங்கேற்று சிறப்பான வெற்றிகளைப் பெற்றனர்.
அர்த்தனா பிரசாந், டெரிக் ஜோய் ஜெயந்தன், அஸ்விதா விக்னேஸ்வரன், சேர்ஜியஸ் இருதியராஜா ஆகிய நால்வர் சாம்பியன் பட்டத்தை வென்றதோடு, பவிரா கோபிலன் மற்றும் மானுசா கோபிலன் ஆகிய இருவரும் ரன்னர்அப் பட்டத்தை வென்றனர்.
BRAINWAVE ACADEMY மூலம் வழங்கப்படும் UCMAS, Robotics, English Speaking போன்ற பாடநெறிகளின் கீழ், ஆசிரியர் தயானா சந்துருவின் வழிகாட்டலால் குறுகிய காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இந்த நிறுவனம் பெரும் சாதனைகளைப் படைத்துள்ளது.