அண்மையில் ஒரு ஈழத்தமிழர் கைது செய்யப்பட்டதால், இது அனைத்து புலம்பெயர் ஈழத்தமிழர்களையும் பாதித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா (KV Thavarasa) தெரிவித்துள்ளார்.
இவர் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவில், தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக குற்றம்சுமத்தப்பட்ட ஒரு ஈழத்தமிழர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாத தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இந்த கைது நடவடிக்கை பல்வேறு கருத்து வேறுபாடுகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரித்தானிய பிரஜை சம்பந்தமான வழக்கு, அனைத்து புலம்பெயர் தமிழர்களிடமும் இலங்கைக்கு பயணம் செய்யும் பொழுது அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இந்த நிலைமையை ஊடறுப்பு நிகழ்ச்சி விரிவாக ஆராய்கின்றது.