2025 ஆம் ஆண்டிற்கான சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கான சிறந்த நாடுகளில் இலங்கை மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.
சீ.என்.ட்ரெவலர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, சுற்றுலாப் பயணிகளின் விருப்ப நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. வெப்பமான காலநிலை, இயற்கை அழகுகள், மற்றும் கடற்கரைகளின் தனிச்சிறப்புகள் காரணமாக இலங்கையை நோக்கி அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.