Clean Sri Lanka” வேலைத் திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி ஒரு செயலணி நியமித்து, அந்தச் செயலணி குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.
“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தின் அடிப்படையில் இந்த வேலைத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டது. இந்த செயலணியில் முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உட்பட 18 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்தின் நோக்கம் நாட்டின் மக்களின் நல்வாழ்வு, நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதுடன், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை விழிப்புணர்வை அதிகரிப்பதாகும். மேலும், சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் சமூக நிலைத்தன்மை, அரசு இயந்திரங்களை வலுப்படுத்தும் முயற்சிகளையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், “Clean Sri Lanka” திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி அமைக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செயலணியில் உள்ள உறுப்பினர்கள்:
- என். எஸ். குமாநாயக்க – ஜனாதிபதியின் செயலாளர்
- இராணுவத் தளபதி
- கடற்படைத் தளபதி
- விமானப்படைத் தளபதி
- W. L. A. சமன் பிரியந்த – பதில் பொலிஸ் மா அதிபர்
- பொறியியலாளர் குமுது லால் டி சில்வா – நகர அபிவிருத்தி அதிகார சபை தலைவர்
- ஐ. எஸ். ஜயரத்ன
- கிஹான் டி சில்வா
- சந்தியா சல்காது
- கலாநிதி காமினி பட்டுவிட்டகே
- கலாநிதி அனுருத்த கமகே
- தில்ருக் வனசிங்க
- தீபால் சூரியராச்சி
- சிசர அமர பந்து
- கிரிஷாந்த குரே
- ஜயது பெரேரா
- ருவான் வீரசூரிய
- தயான் கருணாரத்ன
மேலும், இந்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் ஒருவரும் சேர்க்கப்படவில்லை என்பது முக்கியமான தகவலாகும்.