ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே நடைபெற்ற சந்திப்பின் போது, சில முக்கிய விடயங்கள் பின்தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் முதன்மையாக தமிழர் பிரச்சினை தொடர்பாக எந்தவொரு விவாதமும் நடக்கவில்லை. இதனால், தமிழர்களின் பிரச்சினை அநுர மற்றும் மோடியின் கவனத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதப்படவில்லை.
எனினும், இந்திய பிரதமர் மோடியின் அறிக்கையில் தமிழர் பிரச்சினை மற்றும் மாகாண சபை தேர்தல் தொடர்பான இரண்டு முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இலங்கையில் மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்படும் எனவும் மோடி தெரிவித்துள்ளார்.
ஆனால், 13ஆவது திருத்த சட்டம் குறித்து இந்த சந்திப்பில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான ஆய்வு எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் செய்யப்பட்டுள்ளது.