ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
அந்த ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் மூன்று முக்கிய சீரமைப்புகளின் அவசியம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது:
- மேல்நீதிமன்ற வழக்குகளை மறுசீரமைத்தல்: முக்கிய குற்றவியல் வழக்குகள் முறையாகவும் தாமதமின்றி விசாரணைக்கு வரும் படி ஏற்பாடு செய்ய வேண்டும்.
- ஊழல் தடுப்புக்கு புதிய நடைமுறைகள்: இலஞ்ச-ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியே இருந்து சுயாதீனமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
- சட்டமா அதிபர் திணைக்களத்தின் மறுசீரமைப்பு: தற்போது காணப்படும் அரசியல் ஆதிக்கத்தை தவிர்த்து, சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த ஒரு புதிய அமைப்பு தேவையெனக் கூறப்பட்டுள்ளது.
இக் கடிதத்தில், நாட்டு சட்டப் பாசறை சீர்குலைவதற்கு வழிவகுக்கும் சிக்கல்களை நீக்க, சீரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.