கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்றபோது தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பெண் சந்தேகநபர்களும், ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பான சுற்றிவளைப்பை மேற்கொள்வதற்காகச் சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் (STF) சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து ஆண்களும், ஐந்து பெண்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பகுதியில் அதிகாரிகள் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது, ஒரு சந்தேகநபரைக் கைது செய்தனர். அப்போது, இரும்புக் கம்பிகள் மற்றும் பொல்லுகள் சகிதம் அங்கு வந்த ஒரு கும்பல், அதிகாரிகளைத் தாக்கியதோடு, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விடுவித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
இதையடுத்து, விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய இந்தக் குழுவினரை இராமநாதபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஒரு குழுவினர் தேடிச் சென்று கைது செய்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர், மேலதிக சிகிச்சைக்காகக் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இராமநாதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் ஆண்கள் 16 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், பெண்கள் 26 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேகநபர்கள் இன்று (03) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்கள்.
Ten suspects, including five men (aged 16 to 32) and five women (aged 26 to 45) from the Ramanathapuram area, have been arrested for allegedly attacking a team of Kilinochchi Police Special Task Force (STF) officers who were conducting a raid on illegal liquor sales. The attackers, armed with iron rods and clubs, assaulted the officers, freed a previously arrested suspect, and fled the scene, resulting in two STF officers being hospitalized; the arrested suspects are scheduled to be produced before the Kilinochchi Magistrate’s Court today (03).


