கொழும்பு நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின் உதவி அதிபர் உட்பட ஏழு பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம், கடந்த அக்டோபர் 8 ஆம் திகதி முற்பகல், மிரிஹானை, ஸ்டான்லி மாவத்தையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்தது.
சம்பவம் நடந்த அன்று, அந்தச் சிறுவன் உட்பட ஒரு குழுவினர், ஆசிரியர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளரின் மேற்பார்வையின் கீழ் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது, சிறுவன் நீரில் மூழ்கியுள்ளான்.
இதனைத் தொடர்ந்து, அந்தச் சிறுவன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அதற்கு முன்னரே உயிரிழந்துள்ளான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுவனின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நேற்று (அக்டோபர் 9) மேற்கொள்ளப்பட்டதுடன், களுபோவில வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சடலம் தொடர்பாக திறந்த தீர்ப்பை (Open Verdict) வழங்கியுள்ளார்.
அதன் அடிப்படையில், இந்தச் சம்பவம் தொடர்பில் முன்பள்ளியின் உதவி அதிபர், விளையாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரி, பிள்ளைகளுக்கு பொறுப்பான இரண்டு ஆசிரியர்கள், முன்பள்ளி ஊழியர் ஒருவர் மற்றும் இரண்டு நீச்சல் பயிற்றுனர்கள் உட்பட 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Mirihana Police have arrested seven people, including the Assistant Principal of a preschool, regarding the death of a five-year-old boy who drowned in a hotel swimming pool in the Nugegoda area of Colombo on October 8. The boy drowned while swimming in the hotel pool under the guidance of teachers and a coach; he was pronounced dead upon admission to Kalubowila Hospital, and the arrests were made following an open verdict issued after the post-mortem examination.