வாகன இறக்குமதிக்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதை தொடர்ந்து, கொழும்பு பங்குச் சந்தையில் (Colombo Stock Exchange) கணிசமான வளர்ச்சி காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) வெளியிட்ட தகவலின்படி, வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாகவும், வாகன இறக்குமதி தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்பாட்டைத் தாண்டி வெளிநாட்டு கையிருப்பை மேம்படுத்துவதில் மத்திய வங்கி முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
நேற்றைய தினத்தில், அனைத்து பங்குகளும் 156.4 வீத வளர்ச்சியுடன் 14,810 சுட்டியைக் கடந்து விட்டன. கடந்த நவம்பர் இறுதியில் இருந்து கொழும்பு பங்குச் சந்தை தொடர்ந்து வளர்ச்சி வழியில் பயணிக்கிறது.
அதே நேரத்தில், வாகன இறக்குமதிக்கான அனுமதி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை உருவாக்கி, பங்குச் சந்தையின் திடீர் வளர்ச்சிக்கு தூண்டுதலாக அமைந்துள்ளது.