நீர்கொழும்பு பகுதியில் உள்ள ஒரு வர்த்தகர், வெட்டப்படாத பிரமிட் வடிவிலான அரிய நீல கல்லை கண்டுபிடித்துள்ளார்.
இந்த இரத்தினக்கல்லின் மதிப்பு இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை.
17.42 கரட் எடையுடைய இந்த நீலக்கல், பதுளை பசறை பிரதேசத்தில் உள்ள சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையால் சான்று பெறப்பட்டுள்ள இந்த இரத்தினக்கல், உலக சந்தையில் இலங்கைக்கு நல்ல வாய்ப்பை உருவாக்கும் என்றும் அந்நியச் செலாவணியை அதிகரிக்க உதவும் என்றும் அதன் உரிமையாளர் குறிப்பிட்டார்.
இந்த உரிமையாளர், கடந்த 20 ஆண்டுகளாக இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பிரபல வியாபாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.