2024 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் மிகப்பெரிய இயற்கை சீற்றம் நடைபெறவுள்ளது, அதில் இலங்கைத் தீவு முழுவதும் கடலில் மாயமாகலாம் என தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும் நடிகருமான அனுமோகன் வெளியிட்ட கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: 45 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்கள் எழுதியதையும், பின்னர் கனவில் அவர்கள் கூறியதையும் நான் அறிந்தேன். மனிதன் இயற்கையிடம் மரியாதை செலுத்தாவிடின், பஞ்சபூதங்கள் ஒன்றுசேர்ந்து மனிதனுக்கு பாடம் சொல்லும். கடல் பொங்கும், பூமி பிளக்கும், வானத்தில் எரிநட்சத்திரங்கள் விழும், சூறைக்காற்றுகள் பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து வீசும். இவை அனைத்தும் இந்த ஆண்டுக்குள் நடக்க வாய்ப்பு உள்ளது.
சித்தர்கள் எழுதியது போல, தென்னிந்தியாவில் மூன்று கடல்கள் (அரபிக்கடல், வங்கக்கடல், இந்துமகா சமுத்திரம்) ஒன்றாக பொங்கி, கடலுக்கு அடியில் எரிமலை வெடித்து, சுனாமி உருவாகும். இதனால் இலங்கைத் தீவு முழுவதும் கடலில் மூழ்கும் என சித்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலையில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து அனுமோகன் மேலும் கூறியதாவது, இந்த அழிவு, சிவனின் கோபத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். அண்ணாமலையின் நெற்றிக்கண்ணை திறந்த பிறகே மனிதன் விழித்து இயற்கையின் மீது மரியாதையை வெளிப்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் மிகப்பெரிய பேரழிவு நிகழும் என அவர் எச்சரித்துள்ளார்.
இந்த கருத்துக்கள் தற்போது ஆன்மீகவாதிகளிடமும் பொதுமக்களிடமும் விவாதத்துக்கு இடமாகியுள்ளது.