வேலை ஒப்பந்தங்களை மீறி செயல்பட்ட காரணமாக, இஸ்ரேலில் இருந்து 17 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விவசாயத் துறைக்கான வேலை வீசாவில் இஸ்ரேலுக்கு சென்ற இவர்கள், அப்பணியிடங்களை விட்டு தப்பிச் சென்று பேக்கரிகளில் வேலை செய்தபோது உள்ளூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் வெளிநாட்டு பணியாளர்களை தொடர்ந்து கண்காணிக்கின்ற நாடு என்றும், வேலை வீசாவை வேறு வகை வீசாவாக மாற்றும் சட்டம் அங்கே இல்லையென்றும், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், தாதியர் வேலைக்காக சென்ற இலங்கைப் பெண் ஒருவரும் சேவை நிபந்தனைகளை மீறியதற்காக நாடு கடத்தப்பட்டுள்ளார். முன்னதாக, திருட்டு குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கையரொருவரையும் இஸ்ரேல் நாடு கடத்தியது குறிப்பிடத்தக்கது.