இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்து 75,000 கிலோ அரிசி பாவனைக்கு பொருத்தமற்றதாக தெரிவிக்கப்பட்டதால், அவற்றை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன் பரிசோதனை செய்தபோது, இரண்டு கொள்கலன்களில் வண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், மூன்றாவது கொள்கலனில் பழைய உற்பத்தி திகதி கொண்ட லேபிள்களின் மீது புதிய லேபிள்கள் ஒட்டப்பட்டிருந்ததால், சுகாதாரத்துறை அவற்றை விடுவிக்க அனுமதி மறுத்துள்ளது.