Tuesday, October 14, 2025

தமிழர் பகுதியில் சம்பவம்: பொலிஸாரை ஏமாற்றி குடும்ப பெண்ணை அரங்கேற்றிய பெரிய நாடகம்

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு வீட்டில் சுமார் 45 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் களவாடப்பட்டுள்ளதாகப் பொய் கூறி நாடகமாடிய ஒரு பெண் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி, அந்த 32 வயதுடைய குடும்பப் பெண், தனது கணவர் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குத் திரும்பவுள்ள நிலையில் இந்தக் களவாடல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

விசாரணையில் அம்பலமான உண்மை;

முறைப்பாட்டின் பேரில் நிந்தவூர் பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளையும், தடயவியல் பொலிஸ் பிரிவினர் தீவிர சோதனைகளையும் மேற்கொண்டனர். ஆனால், வீட்டில் நகைகள் களவாடப்பட்டதற்கான எந்தவொரு சான்றுகளும் ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் அந்தப் பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கணவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற நிலையில், தனியாக இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்த அந்தப் பெண், தனது கையிருப்பில் இருந்த பணம் மற்றும் நகைகளை பல்வேறு தேவைகளுக்காகச் செலவு செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில், கணவர் திடீரென நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவித்ததால், பதற்றமடைந்த அவர் நகைகள் களவாடப்பட்டதாகப் பொய் நாடகமாடியுள்ளார். மேலும், கல்முனைப் பகுதியில் உள்ள பிரபல நகையகம் ஒன்றில் நகைகளை விற்பனை செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்.

பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அந்தப் பெண் கைது செய்யப்பட்டு, சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முதலில் அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், அந்தப் பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், நீதிபதி கடும் தொனியில் அவரை எச்சரித்து பிணையில் செல்ல உத்தரவிட்டார்.

In Ampara, a 32-year-old married woman was arrested and later released on bail after fabricating a story about the theft of jewellery worth approximately Rs. 4.5 million. She filed a complaint with the Nintavur Police on September 27, claiming the theft occurred just before her husband’s unexpected return from abroad. Intense police investigation found no evidence of a robbery, leading the woman to confess that she had spent the money and jewellery for her own needs while her husband was away and staged the theft out of panic over his return. The woman was produced before the Sammanthurai Magistrate Court, initially remanded for 14 days, and then released on bail after confessing her crime and receiving a severe warning from the Judge.

Hot this week

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு...

Topics

சோகம்: நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு!

கந்தேநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நலயகர் எல்ல நீர்வீழ்ச்சியில் ஒருவர் தவறி விழுந்து...

சாலை விபத்தில் இருவர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img