நித்திரையில் இருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை மனைவி ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தலைநகர் டெல்லியில் மதங்கிர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வசித்து வரும் தினேஷ் (28) என்பவருக்குத் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. கணவன் – மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன.
கத்தினால் இன்னும் எண்ணெய் ஊற்றுவேன்…
சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு, தினேஷ் மீது அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அப்போது பொலிஸார் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, மீண்டும் தினேஷுக்கும், அவரது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
இந்த நிலையில் தான், “அய்யோ, அம்மா” என்ற கதறல் சத்தம் கேட்டு அயலவர்கள் பலர் எழுந்து ஓடிவந்து கதவைத் திறந்தபோது, தினேஷ் உடல் வெந்த நிலையில் கதறுவதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அவரை மீட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
சில நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர், பேசும் நிலைக்கு வந்த தினேஷ் அளித்த வாக்குமூலம் அந்த அயலவர்களையும், பொலிஸாரையும் அதிர்ச்சியடையச் செய்தது. அவர் கூறியது இதுதான்: “அன்று நானும், என் மகளும் தூங்கிக் கொண்டிருந்தோம். திடீரென்று என் உடல் முழுவதும் கடுமையான எரிச்சலான வலியை உணர்ந்து திடுக்கிட்டு கண்விழித்தேன்.”
“அருகில் என் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் என் உடலின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருந்தாள். அத்துடன் நிறுத்தாமல் அந்தத் தீக்காயத்தில் மிளகாய் பொடியையும் அள்ளித் தூவினாள். நான் வலி பொறுக்க முடியாமல் கதறினேன். ‘வேண்டாம் வேண்டாம்‘ என்று நான் கதறியபோது, என் மனைவி, ‘நீங்கள் கத்தினால் நான் இன்னும் எண்ணெய் ஊற்றுவேன்‘ என்று என்னை மிரட்டினாள்” என்றார் தினேஷ்.
இதையடுத்து, மருத்துவமனையில் இருந்தே தன் மனைவி மீது பொலிஸில் புகார் அளித்தார். தினேஷின் மார்பு, முகம் மற்றும் கைகளில் ஆழமான தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல்நலம் தேறி வருகிறார். தினேஷ் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவரது மனைவியிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
A shocking incident occurred in the Matangir area of Delhi where a wife poured boiling oil on her 28-year-old husband, Dinesh, while he was asleep, following a long-standing marital dispute. After waking up with severe burning pain, Dinesh saw his wife pouring the oil and then sprinkling chili powder on the burns, threatening to pour more oil if he cried out. Neighbors rushed him to the hospital, and after initial treatment for deep burns on his chest, face, and hands, Dinesh filed a police complaint against his wife from the hospital, and police are currently conducting an intensive investigation.