Monday, November 3, 2025

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை உணரப்பட்டுள்ளது சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலையில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இந்த நிலநடுக்கமானது, அந்நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் உள்ள பல்ஹா மாகாணத்தின் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாகக் கொண்டு, பூமிக்கு அடியில் 28 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது என்று வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் பதிவான இந்தச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின்போது, கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கின. அதிகாலையில் உறக்கத்தில் இருந்த பலர், இதனால் அச்சமடைந்து உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அல்லது ஏதேனும் பொருள் சேதங்கள் ஏற்பட்டதா என்பது குறித்த முழுமையான விபரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக 2 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A powerful earthquake, measuring 6.3 on the Richter scale, struck Afghanistan early this morning, centered 28 kilometers deep in the Hindu Kush mountain range near Mazar-i-Sharif in Balkh province. Buildings shook due to the quake, causing many people who were asleep to rush out of their homes, although the details regarding the extent of the damage are not yet available.

Hot this week

மதுபானசாலைகளில் திடீர் சோதனை; அதிரடியாக அம்பலமான மோசடிகள்

இந்தியா டெல்லியின் கலால் துறை அதிகாரிகள் இன்று நரேலா பகுதியில் உள்ள...

தேசிய அடையாள அட்டை பெறுதல் தொடர்பில் புதிய அறிவிப்பு; ஆட்பதிவு திணைக்களம்

தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை தடையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக...

ஹொரணையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் நேற்று  (2) இரவு நடந்த...

பாடசாலையில் மாணவி தற்கொலை; சமூக வலைதளத்தில் அதிர்ச்சி வீடியோ வெளியீடு

இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த...

கித்துல்கலவில் விபத்து ; ஒருவர் பலி

கித்துல்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன்-கித்துல்கல பிரதான வீதியில், 39ஆவது கிலோமீட்டர் தூணுக்கு...

Topics

கிளிநொச்சியில் அதிரடிப்படையினர் மீது தாக்குதல்; 10 பேர் கைது

கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச்...

சில பகுதிகளில் மழை வாய்ப்பு

வளிமண்டலவியல் திணைக்களம்: சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 2.00 மணிக்குப்...

சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த இலங்கை பிக்கு சிறை!

அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகம்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img