இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மின் கட்டணத்தை 11% வரை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளது. மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலைகளையும் மேலும் குறைக்கும் யோசனைகளை ஆராய்ந்து, ஆணைக்குழு இதற்கான மாற்று திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இந்த யோசனை, இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) வழங்கிய தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மின்சார சபை 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு தற்போதைய கட்டண அமைப்பை மாற்றமின்றி தொடர முன்மொழிந்துள்ளது.
மேலும், மின் கட்டண திருத்தம் தொடர்பான பொது மக்களின் கருத்துகளை சேகரிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. ஜனவரி 8ஆம் தேதி வரை, பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்குவதற்கான வாய்ப்பு அளிக்கப்படும் என PUCSL தெரிவித்துள்ளது.