நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இலங்கையின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்குச் சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அபாயங்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
The Department of Meteorology has forecasted that favorable atmospheric conditions for thundershowers in the evening are developing across several parts of the country. Rain or thundershowers are expected in most provinces after 1:00 PM, with the Northern, North Central, and Eastern provinces likely to experience fairly heavy rainfall of over 50 mm in some areas. The public is advised to take necessary precautions to mitigate the risks associated with temporary strong winds and lightning strikes.