நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, யாழ். போதனா வைத்தியசாலை விவகாரம் தொடர்பாக பேச அனுமதி வழங்குமாறு இன்றைய (18) நாடாளுமன்ற அமர்வின் போது கோரிக்கை வைத்தார்.
எனினும், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, அவரின் கோரிக்கையை நிராகரித்து, அர்ச்சுனா உரையாற்ற முயன்றபோது இடைமறித்தார்.
அர்ச்சுனா தனது உரையில், இவ்விவகாரம் பொதுமுக்கியத்துவம் வாய்ந்த அவசர விடயமாக இருப்பதால், உறுப்புரை பிரிவு 19ன் கீழ் விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், முன்னாள் சுகாதார அமைச்சருடன் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடியதாகவும், எழுத்து மூலம் கோரிக்கை சமர்ப்பித்ததாகவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், இது ஒழுங்குப் பிரச்சினையுடன் தொடர்புடையது அல்ல என்று கூறியதை தொடர்ந்து, விவகாரத்தை தொடர வழிவகையில்லை எனத் தெரிவித்தார்.