இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கனடா நோக்கிப் பயணமாகியுள்ளார்.
கனேடிய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
பயணத்தின் போது, கனேடிய வெளிவிவகார அமைச்சின் இந்தோ-பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதியமைச்சர் வெல்டன் எப்பையை சந்தித்து, பொறுப்புக்கூறல், இந்தோ-பசுபிக் பிராந்திய அரசியல் சூழல்கள், மற்றும் தமிழ் மக்களின் நெருக்கடிகள் போன்ற விடயங்கள் குறித்து உரையாடவுள்ளார்.
இந்தச் சந்திப்பு கனடாவின் ஒட்டோவாவில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
சிறீதரனின் இந்த சந்திப்பில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் பங்கேற்கவுள்ளார்.
இதேவேளை, சிறீதரன் எதிர்வரும் 23ஆம் திகதி வரை கனடாவில் தங்கி பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாட உள்ளார்.