இலங்கையின் வரலாற்றிலேயே முதன்முறையாக, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று (17) 4 லட்சம் ரூபாயைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. செட்டியார் தெருவில் உள்ள தங்கச் சந்தை தகவல்களின்படி, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

நேற்று (16) காணப்பட்ட விலையுடன் ஒப்பிடும்போது, இன்று ஒரு பவுண் தங்கத்தின் விலையில் 15 ஆயிரம் ரூபாய் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலையும் இன்று (17) 13 ஆயிரத்து 800 ரூபாய் உயர்வடைந்து, 3 லட்சத்து 79 ஆயிரத்து 200 ரூபாயாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
For the first time in Sri Lankan history, the price of a sovereign of 24-carat gold has exceeded Rs. 4 lakhs, reaching Rs. 410,000 today (17), marking an increase of Rs. 15,000 from yesterday. Concurrently, the price of a sovereign of 22-carat gold also rose by Rs. 13,800, now standing at Rs. 379,200.


