முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் இன்று (20.12.2024) வவுனியாவில் உள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசும்போது, தனது அபிவிருத்திக் குழுத் தலைவராக இருந்த காலத்தில் சில முகவர்கள் அவரது பெயரை தவறாக பயன்படுத்தி பணம் பெற்றதாக குற்றம் சுமத்தினார்.
அவர் கூறுகையில், “நான் பண மோசடி செய்ததாகவும், அதற்காக கைது செய்யப்பட்டதாகவும் சில சமூக ஊடகங்களில் மற்றும் ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. நான் அபிவிருத்திக் குழுத் தலைவராக இருந்தபோது, பலரும் தங்களின் தேவைகளை முடிக்க எனது அலுவலகத்தை அணுகுவது சாதாரணமானதே.
அந்த நேரங்களில், சில அரசாங்க அதிகாரிகளுக்கு தேவையான சிபாரிசுகளை வழங்குவது வழக்கம். ஆனால், சிலர் முகவர்களாக நடந்து கொண்டு, எனது பெயரை பயன்படுத்தி பணம் பெற்றுள்ளனர். அந்த பணம் எனது