அனலைதீவிலிருந்து கடற்றொழிலுக்கு சென்று, இயந்திர கோளாறினால் இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று கடற்றொழிலாளர்கள் 20.12.2024 அன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
இவர்களில் இருவர் அனலைதீவு, மற்றொருவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் 7 மாதங்களுக்கு முன்னர் அனலைதீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட போது, இயந்திரக் கோளாறின் காரணமாக இந்திய கடற்கரைக்கு சென்று சென்றனர். பின்னர், இந்திய கடற்படையினர் இவர்களை சிறைப்படுத்தி, சிறிது காலம் சென்னை புழல் சிறையிலும் திருச்சி இடைத்தங்கல் முகாமிலும் வைத்து இருந்தனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான உரையாடலுக்கும், புதிய கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் முயற்சியினாலும், குறித்த மூன்று கடற்றொழிலாளர்களும் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்