மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், வடமேல் மாகாணத்தில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள், அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில், அவ்வப்போது மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
____________________________________________________________________
The Department of Meteorology has forecast frequent rain in the Western and Sabaragamuwa provinces, as well as the Galle, Matara, Kandy, and Nuwara Eliya districts. Light rain is expected in the Northwestern Province. Showers or thundershowers are likely in some places in the Uva province and Ampara district after 2:00 PM. Additionally, moderately strong winds of 35-45 km/h are anticipated in several regions, including the western slopes of the Central hills and numerous provinces and districts.